Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்… ராமதாஸ் கோரிக்கை!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (12:05 IST)

முந்தைய அதிமுக அரசு அறிவித்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்து அறிவிப்பை வெளியிட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவது என்ற அடுத்தகட்டத்திற்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூக நீதியைப் பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்குத்தான் உள்ளது. அதை உணர்ந்து சமூக நீதியைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் காக்க வேண்டும். பாமகவாக இருந்தாலும்வன்னியர் சங்கமாக இருந்தாலும் அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் சமூக நீதியைப் பாதுகாப்பதுதான். 1980ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் 10 ஆண்டுகள் தொடர் போராட்டங்களை நடத்தி, 21 உயிர்களைத் தியாகம் செய்து வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கச் செய்து 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது.

பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அனைத்திந்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 22.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடும், இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடும் பாமக நடத்திய போராட்டங்களின் பயனாகவே வழங்கப்பட்டன. தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடும் பாமகவின் முயற்சியால் கிடைத்ததுதான். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் 27% இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நான் போராடியதால்தான் அது சாத்தியமானது.

அந்த வகையில்தான் கல்வியிலும், சமூகத்திலும், வேலைவாய்ப்பிலும் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 41 ஆண்டுகளாக ஏராளமான அறப் போராட்டங்களை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன். வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டில் தொடங்கி இந்த ஆண்டில் ஜனவரி - பிப்ரவரி மாதங்கள் வரை 6 கட்டங்களாகத் தொடர் போராட்டங்களை வன்னியர் சங்கமும், பாமகவும் நடத்தின. அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவந்து நிறைவேற்றியது.

அந்த சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டுவிட்டது. அதன்படி அரசு மற்றும் தனிய

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments