Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை’ - ஆதாரம் இதோ!

Advertiesment
’ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை’ - ஆதாரம் இதோ!
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (06:58 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.


 
 
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி ராம்குமார் தற்கொலை செய்தி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது. 
 
"சுவாதி படுகொலை / ராம்குமார் படுகொலை - சிபிஐ விசாரணை தேவை.
 
இராயபேட்டை அரசு மருத்துவர், படுகொலை செய்யப்பட்ட இராம்குமார் உடல் பரிசோதித்து அளித்த மருத்துவ சான்றிதழில்,
'ராம்குமார் இடது கண்ணில் காயம், இடது மார்பில் காயம், இடது கையில் காயம்' என்று குறிப்பிட்டுள்ளார். காயத்தின் அடையாளம் மற்றவரின் தாக்குதல் காரணமாக ஏற்படுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
'ராம்குமார் மரணம் தற்கொலை அல்ல படுகொலை' என்பதற்கு அரசு மருத்துவர் சான்றிதழ் வலுவான ஆதாரமாக மாற்றப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மீண்டும் சமூக ஆவலர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் தற்கொலை குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின்!