Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? அதிமுக மவுனத்தால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (14:13 IST)
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தேமுதிகவுக்கு கண்டிப்பாக ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று சமீபத்தில் பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதிமுக சார்பில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. "ராஜ்ய சபா சீட் கொடுப்பது குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம்," என்று தான் தேர்தலின்போது அதிமுக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், தேர்தலின் போது தேமுதிகக்கு 5 எம்பி தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் ராஜ்யசபா சீட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆவணங்கள், நகைகள்.. அடுத்து என்ன?

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments