Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

கொரோனா இரண்டாம் அலை பயங்கரமா இருக்கும் – ட்ரெண்டாகும் அன்றே சொன்ன ரஜினி!

Advertiesment
Rajnikanth
, செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:49 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் முன்னதாக எச்சரித்ததாக அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தலுக்காக நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் உள்ளிட்டவையும் கொரோனா பரவ முக்கிய காரணம் என பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக தான் அரசியலில் ஈடுபடும் முடிவிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மோசமான விளைவை ஏற்படுத்தலாம் என்றும், தன்னை நம்பி வந்தவர்களை தான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் கூறியதை தற்போது ரஜினி ரசிகர்கள் மீண்டும் #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழோடு வரவேண்டும்… தேர்தல் ஆணையம்!