Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சனம் செய்த கமலுக்கு வாழ்த்து கூறிய ரஜினி!

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (04:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலக நாயகன் கமலும் ஒரே நேரத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்தாலும் கமல் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால் ரஜினி இன்னும் அதிகாரபூர்வமாக கட்சி ஆரம்பிக்கவில்லை
 
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் நட்புடன் இருந்து வந்தாலும் அவ்வப்போது ரஜினியை கமல் மறைமுகமாகவோ நேரடியாகவோ விமர்சனம் செய்ய தவறுவதில்லை. ஆனால் ரஜினியோ இன்று வரை கமல்ஹாசன் குறித்து எந்தவித விமர்சனமும் செய்ததில்லை என்பதும் மாறாக அவருக்கு வாழ்த்துக்களை மட்டுமே அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அந்த வகையில் கமல் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவு செய்துள்ள நிலையில் கமல் கட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...என்று கூறியுள்ளார்.
 
ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி கூறிய கமல், 'என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே  நாளை நமதே என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments