Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் படம் பாத்துட்டு வந்தாரா ரஜினி? பேச்சு அப்படியே இருக்கு!!

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (12:57 IST)
சர்கார் படத்தில் வரும் க்ளைமேக்ஸ் போல ரஜினி முதல்வர் பதவி மீது ஆசையில்லை என தெரிவித்துள்ளார். 
 
தான் கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்திருந்த ரஜினி, படங்களில் நடித்தவாறே அரசியல் செயல்பாடுகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனது மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய ரஜினி, நிர்வாகிகளால் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்தார். அதை பிறகு சொல்வதாக கூறியிருந்தார்.  
 
இந்நிலையில் இன்று லீலா பேலஸில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தனது ஏமாற்றம் என்ன தற்போது தனது அரசியலுக்கு அவர் வைத்துள்ள திட்டம் என்னவென விளக்கம் அளித்தார். இதனோடு தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் கூறினார். 
 
இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது, முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன். 
 
முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை. இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என பேசினார். 
 
ரஜினியின் இந்த பேச்சு முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்து வெளியான சர்கார் பட க்ளைமாக்ஸ் போல உள்ளது என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments