Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் பிரவேச அறிவிப்பு, கருணாநிதியுடன் சந்திப்பு: ரஜினியின் ப்ளான் என்ன??

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (20:24 IST)
திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளார். அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினி அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துள்ளார்.  
 
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 31 ஆம் தேதி அறிவித்தார். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு வந்தாலும், துணிச்சலுடன் இந்த முடிவை எடுத்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துள்ளார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இது குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன்.



மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டு வரும் ரஜினி, திராவிட கொள்கைகளை விதைத்த கருணாநிதியை சந்தித்துள்ளது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments