Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு.. விரைந்து நலம் பெற வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்..!

Siva
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைந்து உடல் நலம் பெற வேண்டி வாழ்த்துவதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் செய்யப்படுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் குழு கூறியதாவது, அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் முடிந்து இன்று அவருக்கு வீடுதிரும்ப வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டும் என பல அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறியடித்து இறங்கிய பயணிகள்..!

ரஜினிகாந்த் உடல்நிலை நிலவரம்.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!

"புதிய அமைச்சரவை பட்டியல்" - உதயநிதிக்கு 3-வது இடம்.!

நேபாளத்தில் ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு: இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments