Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? அறிக்கை கேட்கும் தலைமை தேர்தல் அதிகாரி!

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (17:08 IST)
நேற்று தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும் 18 சட்டமன்ற தொகுதியிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் வாக்களித்தனர்
 
இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாக்கை சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பதிவு செய்தார். அப்போது அவரை புகைப்படம் எடுக்க ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் முண்டியடித்தனர். அந்த சமயத்தில்  ரஜினிக்கு தேர்தல் அதிகாரி இடது கை விரலில் மை வைப்பதற்கு பதிலாக வலது கை விரலில் மை வைத்துவிட்டார். இது பெரும் சர்ச்சையானது
 
இதுகுறித்து பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, 'ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விளக்க அறிக்கை கேட்கப்படும். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments