Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்...!

Advertiesment
மலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் பயன்கள்...!
தாது விருத்தி தரும் பூசணிக்காய் பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு  தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
webdunia
மலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம்  கிடைக்கும். ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும்  செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
 
ஆலம்பழம் பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை  காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலட்டு தனமை  நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவ முறைகள்...!