Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி முதல்வர், ஐஸ்வர்யாராய் மகள் பிரதமர்: சொன்னது யார் தெரியுமா?

Advertiesment
ரஜினி முதல்வர், ஐஸ்வர்யாராய் மகள் பிரதமர்: சொன்னது யார் தெரியுமா?
, திங்கள், 25 ஜூன் 2018 (20:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வராக வருவார் என்றும், அதேபோல் உலக அழகி ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா வருங்கால பிரதமராக வருவார் என்றும் பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் என்பவர் கணித்து கூறியுள்ளார்.
 
இவர் ஏற்கனவே ஒருசில கணிப்புகளை சரியாக கணித்தவர். சினிமாவில் இருந்து சிரஞ்சீவி, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவார்கள் என்றும், ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் முகேஷ் அம்பானி மகன் ஆகாஷுக்கு 2019ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்றும் கணித்து கூறியவர்.
 
webdunia
ரஜினிகாந்த் கட்சி இடைத்தேர்தலுக்கு பின்னர் வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்பார் என்று கூறியுள்ள கியானேஷ்வர், ஐஸ்வர்யாராயின் மகள் ஆரத்யா, தனது பெயரை ரோகினி என்று மாற்றிக்கொண்டால் நிச்சயம் அவர்தான் வருங்கால பிரதமர் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அவர்களது பதவியை தக்க வைத்து கொள்வார்கள் என்று கூறியுள்ள ஜோதிடர் கியானேஷ்வர் , வரும் 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூளும் என்றும் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரான்ஸ் நிறுவனம்: ஸ்டாலின் எதிர்ப்பு