ரஜினி - கமல் என் நண்பர்கள் அல்ல - சரத்குமார் பளீச்

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (10:10 IST)
ரஜினியும் கமலும் என் நண்பர்கள் அல்ல என்றும் கேப்டன் விஜயகாந்த் தான் தமக்கு நெருங்கிய நண்பர் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், தன் கட்சியின் துணைப் பொதுச்ச்செயலாளரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார்.
 
விழாவில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமாரிடம் ரஜினி, கமல் உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சரத்குமார் ரஜினியும் கமலும் தனக்கு நண்பர்கள் இல்லை எனவும் கலைத்துறையில் தன்னுடன் பயணிப்பவர்கள் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
 
எனக்கு நண்பர் என்றால் விஜயகாந்த் தான். நான் கஷ்டப்படும் காலங்களில் எனக்கு உறுதுணையாய் இருந்து உதவிய கேப்டன் விஜயகாந்தை எக்காலத்திலும் மறக்கமாட்டேன் என்றார்.

இனி வரும் காலங்களில் விஜயகாந்துடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் இணைந்து செயல் படுவோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்