மே 18 முதல் 20 வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடைகால அக்னி நட்சத்திரம் நாட்களாக இருந்த போதிலும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது என்பதும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் மே 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது மட்டும் இன்றி இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று அறிவித்துள்ளது.
எனவே மேற்கண்ட 14 மாவட்டத்தில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.