Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:27 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்த நிலையில், எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று மழை பெய்ததால், சென்னை நகரமே குளிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் காரணமாக சென்னை மக்கள் பரிதாபகரமான நிலையில் இருந்ததால், நேற்றைய மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், இதனால் தட்பவெப்ப நிலை சீரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று பல இடங்களில் நல்ல மழை பெய்து உள்ள நிலையில், மணலையில் 14.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல், அம்பத்தூர் பகுதியில் 8.2 சென்டிமீட்டர், மதுரவாயல் பகுதியில் 8.7 சென்டிமீட்டர், திருநின்றவூர் பகுதியில் 8 சென்டிமீட்டர், வளசரவாக்கம் பகுதியில் 6.5 சென்டிமீட்டர், மற்றும் திருவேற்காடு பகுதியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நேற்றைப் போலவே, இன்னும் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் குற்றவாளி சுட்டுக்கொலை: இனிப்பு வழங்கி கொண்டாடிய சிவசேனா கட்சியினர்..!

நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்.! என்ன பிரச்சனை தெரியுமா.?

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

திருமலையை காப்பாற்றுங்கள்.. திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன் தர்ணா..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு.! 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments