Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

Mahendran
வெள்ளி, 8 நவம்பர் 2024 (17:22 IST)
சென்னையில் நவம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்பட தமிழக முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் சில மணி நேர இடைவெளி விட்டு மழை பெய்து வருவதாகவும், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கணிப்புகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில், நவம்பர் 12ஆம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் எனக் கூறியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஐகோர்ட் கேள்வி..!

லேடீஸ் கம்பார்ட்மெண்ட் பெட்டியில் நிர்வாணமாக ஏறிய நபர்: அதிர்ச்சியில் கூச்சலிட்ட பெண்கள்

அம்பேத்கர் பெயரை சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது.. அமித்ஷாவுக்கு ஆதவ் அர்ஜூனா கண்டனம்..!

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஆந்திரா நோக்கி நகர்கிறதா?

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments