Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரத்தில் பராமரிப்பு பணி.. மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரங்கள்..!

Siva
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:33 IST)
தாம்பரத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழு விவரங்கள் இதோ:
 
1. நெல்லையிலிருந்து வரும் 16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் ரத்து 
 
2. செங்கோட்டையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பொதிகை அதிவிரைவு ரெயில் (12662) செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரெயில் , அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
 
3.  நெல்லையிலிருந்து வரும் 15, 16 ஆகிய தேதிகளில் இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரெயில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் அதிவிரைவு ரெயில், அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும்.
 
4.  கன்னியாகுமரியிலிருந்து வரும் 15-ம் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது செங்கல்பட்டிலேயே நிறுத்தப்படும். 
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், அதற்கு மாற்றாக செங்கல்பட்டிலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும்.
 
5. கன்னியாகுமரியிலிருந்து வரும் 14-ம் தேதி மாலை 6 15 மணிக்கு புறப்பட்டு டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக டெல்லி ஹசரத் நிஜாமுதின் செல்லும்.
 
6.  மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சி வரும் அதிவிரைவு ரெயில் வரும் 15-ம் தேதி பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.
 
7. சென்னை எழும்பூரில் இருந்து இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments