Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம்; வாசன் வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
சென்னையில் புதிதாக கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 44.75 ஏக்கரில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அரசு புறநகர் பஸ்கள், ஆம்னி பஸ்கள், மாநகர பஸ்கள் அனைத்தும், ஒரே இடத்தில் இயங்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
 
செங்கல்பட்டில் இருந்து வரும் பஸ்கள், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். 
 
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில், ரயில் நிலையம் அமைக்க வேண்டும். இல்லையெனில், வண்டலுார் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில், அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் விரிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா: பக்தர்கள் குவிந்ததால் கூடுதல் பாதுகாப்பு..!

கைத்தட்டலுக்காக அறிக்கைகளை மட்டும் வெளியிடுவதா? பிரியங்காவுக்கு பாஜக வேட்பாளர் கண்டனம்..!

டிரம்ப் முன்னிலை எதிரொலி: இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம்..! சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நவம்பர் மாதத்தில் முதல்முறையாக உயரும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments