காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள நிலையில் நெல்லையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் நீட் தேர்வு ஏழை மாணவ மாணவிகளுக்கு எதிரானது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்றும் அதனால் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முடிவை அந்தந்த மாநிலங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறோம் என்றும் ராகுல் காந்தி கூறினார்
விவசாயிகளுக்கு அவர்களின் விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும் என்றும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு மோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு கூறினார், ஆனால் நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றும் அவர் கூறினார்
மேலும் தமிழ் மக்கள் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் பெரும் அன்பு வைத்திருக்கின்றனர் என்றும் தமிழக மக்களுக்கும் எனக்கும் ஆன உறவு அரசியல் உறவு அல்ல அது ஒரு குடும்ப உறவு என்றும் தெரிவித்தார்