சீறி பாயும் காளைகள்! முதல் ஜல்லிக்கட்டு தச்சன்கோவிலில் தொடங்கியது!

Prasanth Karthick
சனி, 6 ஜனவரி 2024 (09:47 IST)
பொங்கல் விழா நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியுள்ளது.



தை மாதம் தொடங்க உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் அதையொட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் சமயங்களில் தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.

ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சன்கோவிலில் தொடங்குகிறது. அங்குள்ள அந்தோணியார் கோவிலில் நடைபெறும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அவ்வாறாக இன்று 2024ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்கோவிலில் தொடங்கியது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளுக்கான முன்பதிவு ஆன்லைனில் நடத்தப்பட்ட நிலையில் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், காரைக்குடி, திருப்பத்தூர், தேவக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 700 காளைகள் பங்கேற்கின்றன.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments