Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு ஒரு இரானி.. கனிமொழிக்கு ஒரு ராதிகா? பாஜகவின் மாஸ் திட்டம்..!

Mahendran
சனி, 16 மார்ச் 2024 (12:19 IST)
ராகுல் காந்தியை ஒரு ஸ்மிருதி இரானி தோற்கடித்தது போல் கனிமொழியை ஒரு ராதிகா தோற்கடிப்பார் என்று பாஜக வட்டாரங்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்பி கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக யாரை போட்டியிட வைக்கலாம் என்று ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக முன்னணி தலைவர் ஒருவர் கூறிய போது சரத்குமார் கட்சி தங்கள் கட்சியில் இணைந்த பிறகு பாஜக வலுவடைந்து உள்ளதாகவும் குறிப்பாக தூக்கத்துக்குடியில் ராதிகாவை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வைக்கும் திட்டம் உள்ளது என்றும் கூறினார்.

அமேதியில் ஸ்மிருதி இரானியை நிறுத்தி ராகுல் காந்தியை தோற்கடித்தது போல் தூத்துக்குடியில் கனிமொழியை தோற்கடிக்கவே எங்கள் கட்சி விருது விரும்புகிறது என்று தெரிவித்தார். ஆனால் ராதிகா விருதுநகரில் போட்டியிட விரும்புவதாகவும், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கஷ்டம் என்று கூறி வருவதாகவும் அவரை பாஜக தலைவர்கள் சமாதானம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி இன்னும் ஒரு சில திரை உலக பிரபலங்களையும் தேர்தல் களத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments