Publish Date: Fri, 04 Oct 2019 (11:11 IST)
Updated Date: Fri, 04 Oct 2019 (11:17 IST)
ராதாபுரம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுறையின் வெற்றிக்கு எதிராக திமுகவின் அப்பாவு தொடுத்த வழக்கை தொடர்ந்து மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டார் இன்பதுரை. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகரிகள் நிராகரித்ததாக அப்பாவு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தேர்தல் அணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19,20,21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது மறுவாக்கு எண்ணிக்கைகாக தபால் ஓட்டு பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்பதுரை வெற்றி பெறுவாரா அல்லது அப்பாவு வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். . முன்னதாக 2016 வாக்கு எண்ணிக்கைப்படி, அதிமுகவின் இன்பதுரை 69,590 வாக்குகளும், திமுகவின் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது