Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபித்த பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (15:19 IST)
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் அவருக்கு மக்களை விட கட்சிதான் முக்கியம் என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.



சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருக்கிறது. மாணவர்கள் போராட்டத்தில் பிற இயக்கத்தினர் தலையிடுவது ஏன்? தடை செய்யப்பட்ட ஒன்றை நடத்தினால் அதற்குப் பெயர் போராட்டம்தான். ஜல்லிக்கட்டுக்காக புதிய சட்டம் கொண்டு வந்தாலும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் என்று கூறினார்.

இதன்மூலம் தொடர்ந்து கட்சிக்கு ஆதரவாகவும், பிற கட்சிகளை குற்றம்சாட்டியும் பேசி வருகிறார். இது பிரசார மேடை இல்லை என்பதை முதலில் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிந்துக்கொள்ள வேண்டும். பின்னர் மக்களுக்காக பேச வேண்டும். அதைவிட்டு மீண்டும் அவர் ஒரு அரசியல்வாதி என்பதை வெளிப்படும் விதமாக அவரது கருத்துகள் அமைந்துள்ளது.

அவர் அரசியல் மட்டுமே செய்கிறார். தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற தமிழகம் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆத்துல காந்தம் போட்டா 2 ஆயிரம்.. பைக் சேவைக்கு 5 ஆயிரம்! - கும்பமேளாவில் கல்லா கட்டும் மக்கள்!

சட்டவிரோத குடியேறிகளை உடனே வெளியேற்றுவேன்: அதிபராகவுள்ள ஃப்ரெட்ரி மெர்ஸ் பேட்டி..!

தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா பிரசாந்த் கிஷோர்?

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பிணைக்கைதி! - ஏன் தெரியுமா?

ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி.. எலான் மஸ்க் ஆதரித்த கட்சியும் தோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments