Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழன் என்று சொல்லடா’ - மார்கண்டேய கட்ஜூவின் அதிரடி பதிவு

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (14:59 IST)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதை அடுத்து, மார்கண்டேய கட்ஜூ தமிழர்களை புகழ்ந்துள்ளார்.


 

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எப்போதும் ஆதரவு தருபவர் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ.

முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதும் கூட, ”இந்த பிரச்சனையை நான் தீர்க்கிறேன். உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. அதனால் நீங்கள் ஜல்லிக்கட்டு என்ற பெயரை மாற்றி பொங்கல் விளையாட்டு என்ற பெயரில் கொண்டாடுங்கள். பொங்கல் விளையாட்டுக்கு எந்த வித தடையும் இல்லை” என்றார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் தமிழகம் எங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு மார்கண்டேய கட்ஜூ ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த தனது முகநூல் பதிவில், தான் 1963-65ஆம் ஆண்டுகளில் அலஹாபாத் பல்கலைகத்தில் பி.ஏ. படித்தபொழுது, தமிழ் டிப்ளமோ கோர்ஸில் இணைந்து படித்ததாகவும், அப்போது தன்னுடைய புத்தகத்தின் முதல் வார்த்தையே ‘தமிழர் வீரம்’ என்று இருந்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், இன்னொரு பதிவில் ”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...” என்று பதிவிட்டுள்ளார்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்: எலான் மஸ்க் எச்சரிக்கை

பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணமான பெண் புகார் அளிக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி

"2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும்... பெ.சண்முகம் எச்சரிக்கை..!

விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? ஓபிஎஸ், சசிகலாவுக்கு எடப்பாடியார் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments