Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம்! உதயநிதி

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (13:08 IST)
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில், பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
 
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் - இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்த பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் ; கழக பொதுச் செயலாளர் - மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்து பெற்றோம்.
 
 திமுக இளைஞர்  மாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி - எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி - மாநில உரிமை மீட்போம்!’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments