Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிகளிடையே “கேங் வார்”? 4 நாட்கள் விடுமுறை! – புதுச்சேரியில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:52 IST)
புதுச்சேரியில் இரு வேறு பள்ளி மாணவிகளிடையே எழுந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்த நிலையில், அந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்திருந்த காரணத்தால் அப்பள்ளி மாணவிகள், அருகேயுள்ள குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆனால் இரு பள்ளி மாணவிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பழைய பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், பழைய ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் சில நாட்கள் முன்னதாக மாணவிகள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

ALSO READ: 16 வயது சிறுமி வன்கொடுமை; குற்றவாளிகளின் வீடுகள் இடித்து தகர்ப்பு!

இந்நிலையில் வழக்கம்போல இன்று பள்ளி செயல்பட்ட நிலையில் இரு பள்ளி மாணவிகளுக்கும் திடீரென மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பெற்றோரும் பள்ளியில் குவிந்ததால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பவ இடம் விரைந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி பாரதி மேல்நிலை பள்ளி மாணவிகளை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் குருசுகுப்பம் மேல்நிலைப்பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments