Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரனை சந்தித்த இன்னொரு எம்பி! அதிமுக இடம் மாறுகிறதா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (23:49 IST)
அதிமுக எம்பி செங்குட்டுவன் மற்றும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்பி ஆகியோர் ஏற்கனவே டிடிவி தினகரனைச் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மற்ற எம்.எல்.ஏக்கள், எம்பிக்களுக்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ள நிலையில் நேற்றிரவு மேலும் ஒரு அதிமுக எம்பி, தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்தான் புதுவை எம்பி கோகுலகிருஷ்ணன்

 கோகுலகிருஷ்ணன் எம்பி, தினகரனை சந்தித்தவுடன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'தினகரன் தனது நீண்ட நாள் நண்பர் என்றும், நட்பு முறையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறினார்

மேலும் தினகரனை சந்தித்ததால் தான் அணி மாறவுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியில் உண்மை இல்லை என்றும், இரட்டை இலை எங்கிருக்கின்றதோ அந்த இடத்தில்தான் இருப்பேன்' என்றும் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக அதிமுகவினர் தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருவதால் அதிமுக தலைமை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments