Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (11:42 IST)
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார் 
 
எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை அவ்வப்போது உயர்த்துக் கொண்டே செல்லும் நிலையில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். 
 
இந்த நிலையில் சிலிண்டருக்கான மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுவையை அடுத்து தமிழகம் உள்பட வேறு சில மாநிலங்களிலும் இதே போன்ற மானிய அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments