Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு அதிகாரமும் இல்லை.. அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை!: முதல்வர் வேதனை..!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (10:13 IST)
எங்களுக்கு அதிகாரமும் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் புதுவை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் அதில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதால் இது குறித்து முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை மாநில அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தாலும் அந்த பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பின்னால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னரே தாக்கல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து முதல்வர் கூறிய போது ’மாநிலத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்று கூட அதிகாரிகள் சொல்வதில்லை, சில கோப்புகள் கூட அரசுக்கு வருவதில்லை எங்களுக்கு இன்னும் முழு அதிகாரம் இல்லை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இல்லை மத்திய அரசிடம் வலியுறுத்யே சில பணிகளை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments