Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வைரல் மீம் மெட்ரியலான பப்ளிக் ஸ்டார்:-பட்டைய கிளப்பும் பட்ஜெட் மீம்ஸ்!

J.Durai
வியாழன், 25 ஜூலை 2024 (13:02 IST)
உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருகிறார் எலன் மஸ்க். 
 
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கலாய்க்கும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
அந்த வகையில் சமீபத்தில் AI தொழில்நுட்பம் குறித்து கலாய்க்கும் வகையில் பதிவு செய்து இருந்தார். இதற்காக பீம் மெட்டீரியலாக தமிழ் பட போஸ்டர் ஒன்றை பயன்படுத்தி உள்ளார். 
 
நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்து கொண்டிருக்கும் துரை சுதாகர் நடிப்பில் வெளியான தப்பாட்டம் பட போஸ்டரை தான் பயன்படுத்தி இருந்தார். இவரது இந்த பதிவை பார்த்து அருண் விஜய் இது தமிழ் பட போஸ்டர் என பெருமிதத்துடன் தனது கமெண்ட்டை பதிவு செய்திருந்தார். 
 
மேலும் துரை சுதாகரும் தனது பட போஸ்டரை பயன்படுத்திய எலன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்து இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் இந்த பதிவு பல நூறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது. இதன் மூலம் ஒரே நைட்டில் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகராக மாறினார் துரை சுதாகர். 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் இதே போஸ்டர் மத்திய பட்ஜெட்டை கலாய்க்கும் வகையில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாஜக ஆட்சி அமைக்க உதவியாக இருந்த பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி அள்ளி கொடுத்த மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு ஒன்றுமே அறிவிக்கவில்லை. 
 
இதை வைத்து தான் தற்போது மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments