Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்பிற்கு தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடி வழங்கும் எலான் மஸ்க்..!!

Advertiesment
Trump

Senthil Velan

, செவ்வாய், 16 ஜூலை 2024 (17:34 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தேர்தல் நிதியாக ரூ.375.80 கோடியை எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வழங்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.

அதிபர் தேர்தலில், எலான் மஸ்க் நடுநிலை வகிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சில தினங்களுக்கு முன், டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் என்பவர் சுட்டார். இதன் பிறகு, தேர்தலில் டிரம்பை ஆதரிப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
 
இந்நிலையில் டிரம்பிற்கு, 4.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பு படி ரூ.375.80 கோடி) தேர்தல் நிதியாக எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


தொழிலதிபர்கள் ஷான் மாகுவேர், ஜான் ஹெரிங் ஆகியோர் தலா 5 லட்சம் டாலர்கள், கேமரூன் மற்றும் டைலர் விங்க்லெவோஸ் தலா 2.5 லட்சம் டாலர்கள் நன்கொடை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்முவில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலி.! ஹெலிகாப்டர் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்..!!