Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நிகழ்ச்சி- நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம்

Advertiesment
Palladam
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (22:58 IST)
திருப்பூர் மாவட்டம்.  பல்லடம் வட்டத்தில் நுகர்வோர் பொதுமக்களள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் விழிப்புணர்வு  சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
 
அன்புடையீர் வணக்கம்.
 
''நமது நுகர்வோர் சங்கத்தின் சிறப்பு கூட்டம் உறுப்பினர், செயற்குழு, நிர்வாக குழு கலந்தாய்வு மற்றும் நுகர்வோர் பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நிகழ்ச்சி பல்லடம் பொள்ளாச்சி ரோடு நிர்வாக அலுவலகத்தில் (பல்லடம் நால்ரோடு அருகில் பழைய ஸ்டேட் பாங்க் கட்டிடத்தில்) வருகிற 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.

அதில் நமது நுகர்வோர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட சங்கம் சார்ந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நுகர்வோர் பொதுமக்களும் தவறாது அவசியம் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
-
மேற்படி கூட்டத்தில் சங்கத்தில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை
மற்றும் புதுப்பிப்பு அட்டைகள் வழங்கப்படுகிறது. மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கையும்
நடைபெறுகிறது.
 
அதோடு தனியார் நிறுவன குறைபாடுகள் அரசுத்துறை அலுவலகங்களில் நல திட்டங்களில் பொதுநலன் மற்றும் நுகர்வோர் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது
கடமை தவறிய 'கால தாமதம் இருந்து தீர்வு கிட்டாமல்' இருந்தால் மேற்படி கூட்டத்தில்
மனுவாக முறையீடு செய்தால் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு
சென்று கோரிக்கைகள் குறைகளுக்கு தீர்வுகாண நிவர்த்தி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்