Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தர்மேந்திர பிரதான் உரும பொம்மை எரித்தபோது விபரீதம்: 2 திமுக நிர்வாகிகள் தீக்காயம்..!

Advertiesment
தர்மேந்திர பிரதான் உரும பொம்மை எரித்தபோது விபரீதம்: 2 திமுக நிர்வாகிகள் தீக்காயம்..!

Mahendran

, செவ்வாய், 11 மார்ச் 2025 (12:01 IST)
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை கண்டித்து திமுகவினர் நேற்று பல்வேறு நகரங்களில் அவருடைய உருவ பொம்மை எரிக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போது 2 நிர்வாகிகள் மீது திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தேனி நேரு சிலை அருகே தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு திமுக நிர்வாகி சரவணகுமார் தலைமை வகித்தார்.
 
உருவ பொம்மை எரித்த போது, திடீரென நிர்வாகி ஒருவர் மீது தீப்பற்றியதாகவும், உடனே அங்கு இருந்தவர்கள் தீயை அணைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவருக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
 
மேலும், இந்த தீ விபத்தில் திமுக செயலாளர் சந்திரசேகர் என்பவரின் வேட்டியிலும் தீ பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவர் வேட்டியை கழற்றி வீசியதால், உடலில் தீ பரவாமல் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இரண்டு பேர்கள் மீது தீப்பற்றிய சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹலால் போலவே இந்துக்கள் நடத்தும் இறைச்சி கடைகளுக்கு சான்றிதழ்.. மகாராஷ்டிரா அரசு..!