Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்தம்பித்தது அண்ணா சாலை: ஐபிஎல் போட்டியை எதிர்த்து வலுக்கும் போராட்டம்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (17:17 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அண்ணா சாலை வழியேதான் பெரும்பாலானோர் செல்லவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அண்ணா சாலையை திணறடிக்கும் அளவுக்கு போராட்டம் செய்து வருவதால் அந்த சாலையே ஸ்தம்பித்துள்ளது.
 
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று அரசியல் கட்சிகளும், போலீஸ் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி நடத்தியே தீருவோம் என்ற ஐபிஎல் நிர்வாகமும் கூறியுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி விசிகவினர் திருவல்லிக்கேணியில் இருந்து மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பதட்டநிலை உருவாகியுள்ளது. 
மேலும் சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.
 
எனவே சென்னை அண்ணா சாலையில் அணி அணியாக திரளும் கட்சிகள், இயக்கங்கங்களின் போராட்டம் காரணமாக சென்னை அண்ணாசாலை, வாலஜா சாலை மற்றும் சேப்பாக்கம் ஆகியவை போர்க்களம் போல் காணப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments