Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்கள்.! அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பிரதமர் மோடி..!

Advertiesment
Modi

Senthil Velan

, புதன், 28 பிப்ரவரி 2024 (10:46 IST)
தூத்துக்குடியில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 
இரண்டு நாள் முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். நேற்று பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொது கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். இதைத்தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற சிறு குறு தொழில் முனைவருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடி வந்த பிரதமர் நரேந்திர மோடி, 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வளா்ச்சி நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார்.
 
திட்டங்களின் விவரங்கள்:
 
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
 
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
 
முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
 
வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களைப் பிரதமா் தொடங்கிவைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். 
 
சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.
 
webdunia
தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 844-ல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-ல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-ல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-ல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப் பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

 
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?