பேராசிரியை நிர்மலா கைது: போலீஸ் அதிரடி

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (19:13 IST)
தனியார் கல்லூரியின் கணித பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யபட்டார்.
 
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி என்பவர் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
 
பின்னர் மாணவிகளிடம் தவறாக பேசியதாக பேராசிரியர் நிர்மலா தேவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கல்லூரியின் நிர்வாகம் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் பேராசாரியை நிர்மலாவின் வீட்டின் பூட்டை அவரின் உறவினர் முன்னிலையில் போலீசார் உடைத்து அவரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments