Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
, ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (09:43 IST)
மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54
 
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர்
 
குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார். இவர்  நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட  பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
webdunia
ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஸ்ரீதேவி மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என தெரிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் சென்னை வருகை ஓபிஎஸ்க்கு முதல்வர் பதவி பெற்றுக்கொடுக்கவே - தங்கத்தமிழ்செல்வன்