Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வெற்றிக்கு வியூகமா? வாய்ப்பே இல்ல: அரசியல் சாணக்கியன் கறார்!!

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (12:24 IST)
அதிமுகவிற்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கப்போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 
 
பிரஷாந்த் கிஷோர் மிகப்பெரும் அரசியல் விமர்சகர். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளையும் இன்ச் பை இன்ச் தெரிந்து வைத்திருப்பவர். 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது மோடியையும், அவரது திட்டங்களையும் இந்தியாவெங்கும் கொண்டு செல்ல அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தவர் இந்த பிரஷாந்த் கிஷோர். 
தற்போது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முக்கிய ஆலோசகராய் இருந்து வழிநடத்தி அவருக்கு வெற்றி கிட்ட முக்கிய நபராக ஒருந்தவரும் இந்த பிரஷாந்த் கிஷோர்தான்.
 
இந்நிலையில் தேர்தல் தோல்வியில் நொந்து போய் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவரை நேரில் சந்தித்து 2021-ல் தமிழக சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைக்க தேர்தல் வியூகம் போட்டுக்கொடுக்கும் படி கேட்டதாக செய்திகள் வெளியானது. 
அதேபோல், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆலோசகராக செயல்பட உள்ளார் என செய்திகளும் வெளியானது. ஆனால், இதை அனைத்தையும் மறுத்துள்ளார் பிரசாந்த கிரோஷ். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு... 
 
நான் நிறைய பேரை சந்தித்து பேசுகிறேன். அதனால் அவர்களுக்காக வியூகங்களை வகுத்து தர போகிறேன் என்று சொல்ல முடியுமா? அதிமுக, மக்கள் நீதி மய்யம், போன்ற கட்சிகளுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக எந்த பேச்சும் நடக்கவில்லை. 
இது தொடர்பாக வந்த செய்திகள் எல்லாம் பொய்யானவை. ஒரே நேரத்தில் எப்படி ஒரு மாநிலத்தை சேர்ந்த 2 கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து தர முடியும்? என்று கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments