Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் தேமுதிக? மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கிறார் பிரேமலதா..!

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (13:20 IST)
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்த பின் தனி அணியை அமைக்க முயற்சி செய்து வரும் நிலையில் பாஜக தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கவும் இன்னொரு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் பாஜக அணியில் ஒரு சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணிகள் தேமுதிக இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ: தொடங்கியது பேச்சுவார்த்தை.. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் உடன்பாடு ஏற்படுமா?
 
சென்னையில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு இன்று அஞ்சலி செலுத்த பியூஸ் கோயல் செல்லவுள்ள நிலையில் அப்போது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தற்போது பாஜக கூட்டணியில் இணையுமா? அல்லது மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே நீட்டிக்குமா? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் தெரியவரும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments