Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்காந்த் நினைவிடத்தில் தினமும் மதிய உணவு… தேமுதிகவினர் முடிவு!

Advertiesment
விஜய்காந்த் நினைவிடத்தில் தினமும் மதிய உணவு… தேமுதிகவினர் முடிவு!

vinoth

, திங்கள், 8 ஜனவரி 2024 (07:34 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் உடல் அவரது கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் தினசரி அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வருபவர்களுக்கு தினமும் மதிய உணவு தேமுதிகவினரால் வழங்கப்பட்டு வருகிறதாம். இதை தினப்படி தொடர தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இணைந்து முடிவெடுத்து இதை முன்னெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவழியாக பிரச்சனை முடிந்து ரிலீஸுக்கு தயாரான ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்!