Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு !

Advertiesment
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிப்பு !
, சனி, 16 அக்டோபர் 2021 (21:56 IST)
தமிழக அளவில் ஆட்சிப்பொறுப்பேற்ற அனைத்து துறைகளிலும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்து வரும் நிலையில், ஆங்காங்கே தற்போது தலைதூக்கியுள்ளது மின்சார துண்டிப்பு தான்,.தற்போது மின்சாரத்துண்டிப்பு குறித்து கவலையடைந்து வருகின்றனர். 

இதுமட்டுமில்லாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமயபுரத்திற்கு வரும் போது மின் தட்டுப்பாடு குறித்து அவரிடம் புலம்பி அழுதனராம் பொதுமக்களும், வியாபாரிகளும், இந்நிலையில்., தற்போது ஆங்காங்கே மின் தட்டுப்பாடுகள் நிகழ்ந்து வரும் நிலையில், இன்று கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நஞ்சைப்புகளூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 1.20 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதால் சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாலை 7.30 மணி முதல் 8.57 மணி வரை மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெருமளவில் அவதிக்குள்ளானார்கள். மேலும், தற்போது தான் ஆன்லைன் கல்வி மற்றும் பள்ளிகள் திறந்துள்ளன. இந்நிலையில், வணிகம் மற்றும் கல்வி ஆகியவற்றைகள் முக்கியமாக பாதிக்கப்படுவதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரம் துறை மீது தனிக்கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த துறை முன்னேறுவதோடு, திமுக ஆட்சியில் மின்வெட்டு என்கின்ற வார்த்தை இல்லாமலே போய்விடும் ஆகவே நடவடிக்கை எடுப்பாரா ? முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கின்றனர் நடுநிலையாளர்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகத்தில் ஊழியர்கள் போராட்டம்