போஸ்டர் ஒட்ட வேண்டாம் என கூறியும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்க்களை ஒட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு தான் அரசியலுக்கு வருவது நிச்சயம் எனவும் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்ப இல்லனா இன எப்பவும் இல்லை என கூறி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தினா்.
கொரோனா தொற்று காரணமாக தனது அரசியல் பயண தொடக்கத்தை சிறிது மாதம் தள்ளிப்போட்டுள்ள ரஜினிகாந்த் அக்டோபர் மாதத்தில் இருந்து மதுரையிலிருந்து தொடங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை வீடியோ கான்பிரசிங் முறையில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே மதுரையில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவரது அரசியல் வருகையை வரவேற்கும் விதமாக பல்வேறு சுவரொட்டிகளை ஓட்டிவருகின்றனர். ரசிகர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், கடவுள் நித்தனை ஒழியட்டும், ஆன்மீக ஆட்சி மலரட்டும், ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும் என வாசங்கள் அடங்கிய போஸ்டகள் ஒட்டப்பட்டுள்ளது.