ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் அதிமுக உள்ளட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்
ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஒரு கௌரவ பிரச்சனை என்றும் இந்த தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள காவல்துறையினர் தபால் வாக்குகளை இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெறும் தபால் வாக்கு பதிவு மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.