Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிப்பு கம்மியாக உள்ள பகுதிகளில் குழு பரிசோதனை – அப்படினா என்ன தெரியுமா?

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (15:59 IST)
கொரோனா பாதிப்பு கம்மியாக உள்ள 21 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மாதரிகள் குழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று வரை மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமானாலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகளவில் சோதனைகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், திருவாரூர், தென்காசி, அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது, அதுபோலவே, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, தஞ்சாவூர், தருமபுரி, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு  ஆகிய 21 மாநிலங்களிலும் அதிகளவில் சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் மாதிரிகள் மொத்தமாக 10 சேர்த்து ஒரே சோதனையாக மேற்கொள்ளப்படும். ஒரு வேளை அதில் நெகட்டிவ் என வந்தால் 10 பேருக்கும் கொரோனா இல்லை என அறிவிக்கப்படும். பாசிட்டிவ் என வந்தால் 10 மாதிரிகளுக்கும் தனித்தனியாக மீண்டும் சோதனை மேற்கொள்ளப்படும். இந்த குழு சோதனையின் மூலம் அதிகளவில் சோதனைகளையும், சோதனைத் திறனை அதிகரிக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments