Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக தலைமையின் கீழதான் நாங்க இருக்கோம்! – ஜம்ப் அடித்த பொன்னார்

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (12:03 IST)
அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போதுதான் முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனது கருத்தை கூறியுள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் “பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம்” என்ற வகையில் பேசியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக அமைச்சர்கள் சிலரும் ஆட்சேபணை தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திக்க உள்ளார். முன்னதாக கூட்டணி குறித்து பேசியுள்ள அவர் “தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி இல்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது. 2021ல் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக இருக்கும். மேலும் கூட்டணி குறித்தும், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்தும் பாஜக மத்திய தலைமையே முடிவுகளை எடுக்கும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments