Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (11:55 IST)
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 6ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
 
இதனை அடுத்து சற்றுமுன் கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பு!
இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பொன்ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெற்றி பெற்றால் மீண்டும் அவர் மத்திய அமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பொன்ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றபோது மத்திய அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments