Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்கக் கூடாது - பொன். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (14:40 IST)
மறைந்த ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 
வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி தனது பிறந்த ஊரான ராமநாதபுரத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும், மறைந்த முன்னள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். 
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து  தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன் “ அப்துல் கலாம் ஜாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர். எனவே, கமல்ஹாசன் அவரது நினைவு இல்லத்தில் கட்சி தொடங்குவது தவறு. அது அப்துல் கலாமை கொச்சைப்படுத்துவது போல் அமையும். ரஜினி, கமல் ஆகியோர் தொடங்கும் கட்சி இங்குள்ள நூற்றில் ஒன்றாகத்தான் அமையும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments