Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீசார் சுட்டது ஸ்னைப்பர் துப்பாக்கியால்? - அதிர்ச்சி செய்தி

Webdunia
புதன், 23 மே 2018 (10:10 IST)
தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழக போலீசார் ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி  பேரணியாக சென்றனர்.  அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 
 
அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் இதுவரை 10க்கும்  மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக காவல்துறை அரசியல் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பொதுமக்களை சுட போலீசார் ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்னைப்பர் 7.2 எம்.எம். துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த துப்பாக்கி 3800 மீட்டர் இலக்கை தாக்கி கொல்லும்.
 
ஆப்டிகல் சைட் 1300 மீட்டர்
 
ஒப்பன் சைட் 1200 மீட்டர்
 
1300 மீட்டரில்( 1.3 கிலோ மீட்டர் ) ஒரு முடி அளவு குறி தவறாமல் சுடலாம்.
 
கலவரத்தை கலைக்க எதற்காக ஸ்னைப்பர் பயன்படுத்தப்பட வேண்டும்? இலக்கு தவறாமல் மிகச்சரியாக சுட கூடிய துப்பாக்கியை வைத்து கால்களில் சுட முடியாதா? இது ஒரு திட்டமிட்ட படுகொலை என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனால், போலீசார் பயன்படுத்தியது ஸ்னைப்பர் துப்பாக்கி இல்லை அது Selfie loading refile எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments