Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமி: தப்பி ஓடிய ஆப்பரேட்டர்! – சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (09:49 IST)
சென்னையில் ராட்டினத்தில் தலை சிக்கிய சிறுமியை மீட்காமல் தப்பிய ஓடிய ஆப்பரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான விளையாட்டு பூங்கா உள்ளது. அங்கு உள்ள ராட்டினம் ஒன்றில் சிறுமி ஏறியுள்ளார். ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமியின் தலை ராட்டினத்தின் பக்கவாட்டில் சிக்கி கொண்டது. அருகிலிருந்தவர்கள் கூச்சலிடவும் ராட்டினத்தின் ஆப்பரேட்டர் தப்பித்து ஓடி விட்டார்.

சம்பவம் அறிந்து உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்து நேரத்தில் சிறுமியை காப்பாற்றாமல் ஓடிய ஆபரேட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments