Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் பதுங்கினாரா ராஜேந்திர பாலாஜி?! தேடி விரைந்தது தனிப்படை!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:54 IST)
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை தேடி வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பதவியில் இருந்தபோது தமிழக அரசின் பொது நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடைய 4 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படைகள் மதுரை, சென்னை பகுதிகளில் தீவிரமாக தேடி வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பெங்களூர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

அடுத்த கட்டுரையில்
Show comments