Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்தியவர்கள் மீது தடியடி: தென்காசியில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (18:50 IST)
ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்தியவர்கள் மீது தடியடி
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் மசூதிகளில் தொழுகை நிறுத்தப்படுவதோடு, அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டுமென இஸ்லாமிய மதத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 
ஆனால் தென்காசியில் உள்ள ஒரு மசூதியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஒரு சிலர் கூடி தொழுகையை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று மசூதி நிர்வாகிகளிடம் பேசி அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்
 
ஆனால் போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகிகள் அவர்களிடம் வாக்குவாதம் செய்ததொடு, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை போலீசார் மீது வீசியதாக தெரிகிறது. இதனை அடுத்து தடியடி செய்த போலீசார் அங்கு தொழுகையில் ஈடுபட்டு கொண்ட அனைவரையும் அடித்து விரட்டினர். ஒரு சிலர் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது என்பதும் அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments